எம்பிலிபிடிய – சுஹதபுர புதிய நகரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவே இவர் பலியாகியுள்ளார் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஒருவராவார்.
இதேவேளை, தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

