நீதிபதியின் அழுகையால் நெகிழ்ந்தார் அமெ.தூதுவர்

285 0

தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ராக இருந்து உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் மனை­வி­யின் காலில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் வீழ்ந்து கத­றி­ய­ழுத சம்­ப­வத்­தைக் கண்டு, ‘ஆழ­மாக நெகிழ்ந்­தேன்’ என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப் குறிப்­பிட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் நேற்று முன்­தி­னம் காலை, உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் மனை­வி­யின் காலில் வீழ்ந்து நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் கதறி அழு­தார். இது தொடர்­பான காணொலி சமூக வலைத்­த­ளங்­க­ளில் பகி­ரப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசாப்­பும் தனது கீச்­ச­கத்­தில் இந்­தக் காணொ­லி­யைப் பகிர்ந்­தி­ருந்­தார். அத்­து­டன் ‘ஆழ­மாக நெகிழ்ந்­தேன்’ என்று கருத்­தும் பதி­விட்­டுள்­ளார்.

இதே­வேளை, சிங்­கள ஊட­கங்­க­ளில் நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மேற்­படி சம்­ப­வத்­துக்கு, நேற்­றும் பல­ரும் தமது கருத்­துக்­க­ளைப் பகிர்ந்­துள்­ள­னர். நீதி­ப­தி­யின் மனி­தா­பி­மா­னத்­துக்கு முன்­பாக இன­வா­தம் தோற்­று­வி­டும் என்­றும் பதி­விட்­டுள்­ள­னர்.

மேலும், இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூத­ர­கம், இந்­தத் தாக்­கு­தலை கண்­டிப்­ப­தா­கக் கீச்­ச­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a comment