சைட்டம் எதிர்ப்புக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

217 0

மாலபே சைட்டம் நிறுவனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் பொதுக் கூட்டம் தற்பொழுது கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறுகின்றது.

ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இக்கூட்டத்துக்கு ஆதரவாளர்கள் சமூகமளித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பக்கத்திலிருந்து லிப்டன் சுற்றுவட்டம், டவுன் ஹோல் ஊடாக விகார மகாதேவி பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், 138 பாதை வழியாகவும் போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படும் விதமாக இக்கூட்டத்துக்கு ஆர்ப்பட்டக்காரர்கள் வருகை தந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment