இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவர்

214 0

இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்றார்.

13 ஆவது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார்.

21 குண்டுகள் முழங்க பதவிப் பிரமாணத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், அப்துல் கலாம், இராதாகிருஷ்ணன், பிராணாப் முகர்ஜி பாணியில் தாமும் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வேற்றுமை பல இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பதே தமது நாட்டின் பலம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தம்மை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ராம்நாத் கோவிந்த்;;, தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Leave a comment