சிங்கப்பூர் செல்ல டிரானுக்கு அனுமதி

242 0

ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கின் முதலாவது பிரதிவாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிரான் அலஸ், மருத்துவ சிக்சைகளுக்காக சிங்கப்பூர் செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்தது.

ராடா நிறுவனத்தில், அரச பணமான 124 மில்லியன் ரூபாயை மோசடி செய்தமை தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ், எல்.ரீ.ரீ.யின் நிதி சேகரிப்பாளரான எமில் காந்தன் மற்றும் ராடா நிறுவனத்தின் இரண்டு பணிப்பாளர்களான டொக்டர் ஷெஹான் சாலிய விக்கிரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனது சேவைபெறுநர், மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளதாக, டிரான் அலஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லதுவஹெட்டி கோரினார்.

ஓகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 8ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதித்த நீதிபதி, அந்தக் காலப்பகுதிக்கு மாத்திரம், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் கடவுச்சீட்டை விடுவிக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

Leave a comment