சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே – டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதி 

380 0

சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மையே என டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அணியின் பொதுச்செயலாளர் சசிகலாஇ சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க 2 கோடி ரூபா லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில்இ சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளராக மாற்றப்பட்டார்.
சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது என்று அறிக்கை அளித்த அதிகாரியான ரூபாஇ தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதாவது சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்று கூறி இருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக கூறப்பட்டாலும் அவ்வாறு சிறப்பு வசதி செய்யும் போது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு முறைப்படி தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
எனினும் அவ்வாறு எந்த அனுமதியும் பெறவில்லை. அப்படி என்றால்இ அவருக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் சிறப்பு வசதிகள் தான் எனவும் ரூபா கேள்வி எழுப்பியுள்ளார்

Leave a comment