எமது பெண்கள் சிறப்பாக விளையாடி தோற்றார்கள் – பிரதமர் மோடி

356 0

இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளீர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
இது குறித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நம்முடைய பெண் கிரிக்கெட் வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர்கள்.
உலகக் கோப்பையில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய பெண்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல்இ பல்வேறு தரப்பினரும் இந்திய மகளீர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலஇ இந்திய மகளீர் சிறப்பாக விளையாடியதாக தெரிவித்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல்இ தாயகம் திரும்பும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையேஇ உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன் ப்ரீட் கவுருக்கு பாஞ்சாப் அரசு மாநில காவல்துறை பிரிவில் அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment