உலக கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து மகளீர் அணி

336 0

11வது மகளீர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை இங்கிலாந்து மகளீர் அணி கைப்பற்றியது.

இந்திய மகளீர் அணியுடன் நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 9 ஒட்டங்களால் இங்கிலாந்து மகளீர் அணி வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளீர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதற்கமைய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்திய மகளீர் அணி 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன்படி இந்த போட்டியில் இங்கிலாந்து மகளீர் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்;றியது.

இந்த போட்டியில் இந்திய மகளீர் அணி இறுதி 7 விக்கட்டுக்களை வெறும் 28 ஓட்டங்களுக்கு இழந்தது.

இதன்படிஇ போட்டியில் வென்ற இங்கிலாந்து மகளீர் அணி 4வது முறையாகவும் உலக கிண்ணத்தைக் கைப்பற்றியது.

Leave a comment