அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் 

347 0

ஜோர்டான் தலைநகர் அமானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டுச் சம்பவத்தல் இருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் இஸ்ரேலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துதரகத்திற்குள் நுழைந்த இருவர் அங்குள்ளவர்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு ஜோர்டானியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து எதனையும் வெயியிடவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் புனித தலமாக கருதப்படும் ஓர் இடத்தில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இஸ்ரேலை எதிர்த்து அம்மானில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜோர்டானியர்கள்; பங்குகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment