எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

497 0

201608090430313068_Ethiopia-protests-Nearly-100-killed-in-Oromia-and-Amhara_SECVPFகிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆப்பிரிக்க கண்டத்தில் சூடான், தெற்கு சூடான், கென்யா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளை எல்லைப் பகுதிகளாக கொண்ட நாடு எத்தியோப்பியா. உலகின் இரண்டாவது அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ நாடு இதுதான். இந்த நாட்டின் தலைநகர், அடிஸ் அபாபா.

விவசாய நிலங்களை கையகப்படுத்தி இந்த நகரத்தை விஸ்தரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.குறிப்பாக ஒரோமியா பிராந்தியத்தில் பல நகரங்களில் இருந்து விளைநிலத்தை கையகப்படுத்த அரசு விரும்புகிறது. ஆனால் இந்த ஒரோமியா பகுதி, நாட்டின் மிகப்பெரிய இனமான ஒரோமா இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிற பகுதி ஆகும்.

தலைநகரத்தை விஸ்தரிப்பதற்காக இந்த ஒரோமியா பிராந்தியத்தில் விவசாய நிலங்களை எடுப்பதற்கு எதிராக ஒரோமா இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தி விட்டால், தாங்கள் இடம் பெயர வேண்டிய நிலை வந்து விடும் என விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
போராட்டங்கள்

இதையடுத்து அரசின் திட்டத்துக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் மாணவர்கள் முதலில் போராட தொடங்கினார்கள். பின்னர் பல தரப்பினரும் போராட தொடங்கினர். எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் போராட தொடங்கினார்கள். ஆனால் அங்குள்ள அரசு இந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தொடங்கியது.

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி பாதுகாப்பு படையினரைக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்த வைத்தது. இதன் காரணமாக ஆரோமியா மற்றும் அம்காரா ஆகிய பகுதியிகள் கடந்த வாரத்தில் மட்டும் 90 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.