ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செங்குருதியால் தகரத்தெறியப்பட்ட நாள் சூலை-23! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

28117 0

சிங்கள பௌத்த பேரினவாத பேயரசு தமிழரக்ளின் செங்குருதி குடித்து கொலைவெறியாட்டம் ஆடிய சூலை-23 இனப்படுகொலை கறுப்பு நாள் நடந்தேறி 34 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அதன் வடுக்கள் உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் மாறாவலியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது.

தமிழர்களை குறுகிய ஓரிடத்திற்கு விரட்டிச்சென்று கொன்று குவிக்கப்பட்ட இரத்த சரித்திரத்தின் சாட்சி முளள்pவாய்க்கால் என்றால்.. இலங்கைத் தீவெங்கிலும் தமிழர்களைக் கொன்றும் அவர்களது உடமைகளை தீக்கரையாக்கியும், சூறையாடியும் சிங்களக் காடையர்கள் கோரத்தாண்டவம் ஆடிய கறுப்பு சரித்திரத்தின் சாட்சி சூலை-23 ஆகும்.

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தின் எழுச்சி தமிழர்களின் உயிரப்பறிப்பில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னணியில் ஒன்றுபட்ட இலங்கை எனும் அரசியல் சூத்திரம் தமிழர்களின் செஙகு;ருதியால் தகர்த்தெறியப்பட்ட நாள் இன்றாகும்.

தமிழர்களின் பாதுகாப்பான இருப்பிற்கு தனித் தமிழழீமாக மீழ்வது ஒன்றே தீர்வென இடித்துரைத்து உலகெங்கும் சிதறிக்கிடந்த தமிழர்களை சுதந்திர தமிழழீம் என்ற இலட்சியத்தின் பின்னால் ஒன்றிணைத்த நாளும் சூலை-23 ஆகும். தமிழத்;தலைமைகளின் சுயநல அரசியலால் இனிமேல் தமிழர் பாதுகாப்பை நோக்கி ஓடுவதற்குக்கூட இடமில்லாத நிலை வந்துகொண்டிருக்கிறது.

1958 இல் தொடங்கி 2009 மே-18 வரை வெளிப்படையான இனவழிப்பு அரங்கேற்றப்பட்டு வந்த நிலையில் இநத் நொடிவரை மறைமுகமான வழிகளில் தஙகு;தடையின்றித் தொடர்ந்தே வருகின்றது. அடிபணிவு அரசியல் மூலம் பிழைப்புவாத அரசியல் போக்கில் தொடரும் தமிழத்தலைமைகளின் துணையுடன் தொடரும் ரணில்-மைத்திரி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் காலத்தில் என்றுமில்லாத வகையில் நுணுக்கமான முறைகளில் தமிழர்களின் இருப்பு சூறையாடப்பட்டு வருகின்றது.

பிராந்திய நலன்சார் வட்டத்திற்குள் நின்று உலகநாடுகள் மேற்கொண்டுவரும் மென்மையான அழுத்தங்களைக் கூட, இனவாத சக்திகளை கொம்புசீவிவிட்டு தப்பித்துக்கொள்ளும் தந்திரத்தை இந்த நல்லாட்சி(?) அரசும் கையிலெடுத்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே உள்கட்சி குழப்பம் ஏற்பட்டுள்ளதாக நாடகம் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.

தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக்கியதான தாயகம்-தேசியம்தன்னாட்சி ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையிலான சுதந்திர தமிழழீம் ஒன்றே தமிழர்கள் எதிர்நோக்கிவரும் துன்பங்கள் யாவற்றிற்குமான தீர்வாகும். அதனை நோக்கிய பயணத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் இறுதிவரை உறுதியுடன் செயற்படுமாறு இத்தருணத்தில் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழழீத் தாயகம்’

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Leave a comment