அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த சேவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள் என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
தமக்கு கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் உள்ள வைத்தியசாலைகளிலேயே சிறுநீரகங்கள் அகற்றப்படுகின்றன என்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நியூஸ்கோப்பின் ஆய்வின்படி, அவுஸ்திரேலியாவில் சிறுநீரகங்களுக்கான கேள்வி உள்ள நிலையில் சுமார் 100 அவுஸ்திரேலியர்கள், சிறுநீரக கொள்வனவுக்காக பணம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளிடம் நியூஸ்கோப் வினவியபோது தமது உறவினர்கள், அவுஸ்திரேலியா செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்வது தமக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிலர் தமது பிள்ளைகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஒவ்வொரு வருடமும் மனித உடலுறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேல், மலேசியா, மாலைத்தீவு என்று பல நாடுகளின் சுமார் 1000 பொதுமக்கள், இலங்கைக்கு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது
- Home
- முக்கிய செய்திகள்
- சிறுநீரகத்தை விற்று அவுஸ்ரேலியா செல்லும் இலங்கை அகதிகள்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

