சந்திரனில் மண்ணை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பைஇ 1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலம்

292 0

சந்திரனில் முதன்முதலில் மண்ணை சேகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பைஇ 1.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

அப்பலோ 11 விண்ணோடத்தின் மூலம் 1969ஆம் ஆண்டு சந்திரனுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங்இ இந்த பையை பயன்படுத்தியே சந்திரனில் இருந்து மண் மற்றும் கற்களை சேகரித்துள்ளார்.

நீண்டகால சட்டசிக்கலை எதிர்நோக்கி இருந்த இந்த பைஇ தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த விண்ணோடம் தரையிறங்கியதன் பின்னர்இ அதன் அனைத்து பாகங்களும் நுதனசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும்இ குறித்த பை அனுப்பி வைக்கப்படவில்லை.

பின்னர் இந்த பை 2015ஆம் ஆண்டு நாசாவினால் தவறுதலாக சட்டத்தரணி ஒருவருக்கு வெறும் 995 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை மீட்பதற்கு நாசா பின்னர் முயற்சித்திருந்த போதும்இ நீதிமன்றம் குறித்த சட்டத்தரணிக்கு சார்பாக தீர்ப்பளித்திருந்தது.

தற்போது அதனை அநாமதேயமான நபர் ஒருவர் ஏலத்தில் பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போதும் குறித்த பையில் சந்திரனில் இருந்து திரட்டப்பட்ட மண் மற்றும் சிறிய கற்கள் என்பன இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment