
11வது மகளீர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்கு இந்திய மகளீர் அணி தகுதி பெற்றுள்ளது.
அவுஸ்ரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்ற நிலையிலேயே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்தின் டெர்பி (Derby) யில் இடம்பெற்ற இந்த போட்டி சீரற்ற காலநிலை காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்;டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஹர்மன் பிரீட் கவுர் (Harmanpreet Kaur) 115 பந்துகளை எதிர்கொண்டு, ஆட்டமிழக்காது 171 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இது உலக கிண்ண போட்டியில் மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் மகளீர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5 வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவானது.
பதிலளித்த அவுஸ்ரேலிய மகளீர் அணி 40.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் அலெக்ஸாண்ட்ரா ஜோய் பிளாக்வெல் (Alexandra Blackwell) 90 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
இந்த நிலையில் 11வது உலக கிண்ண இறுதி போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகள் அதில் பங்குகொள்ள உள்ளன.
இறுதி போட்டி எதிர்வரும் 23ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

