வடகொரியாவில் கடுமையான வறட்சி

449 0

2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடகொரியாவில் மிக கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விவசாய உற்பத்திகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் சிறார்களும் முதியவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாய நிலைமை வடகொரியாவிற்கு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு வடகொரியாவில் நிலவிய பஞ்சத்தின் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment