அரசியலமைப்பு பேரவை தொடர்பில் மகிந்த அணியில் இருவேறு நிலைப்பாடுகள்

267 0

அரசியலமைப்பு பேரவையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் மகிந்த அணியின் மத்தியில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த தினம் வெளியேறினர்.

மஹாநாயக்கர்களின் எதிர்ப்பை மீறி அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றுஇ நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

எனினும் மகிந்தஅணியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள் இதுதொடர்பில் அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர் அரசியல் யாப்பு தயாரிப்பு வழிநடத்தல் குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகஇ மகிந்த அணியினரால் அறிவிக்கப்பட்டிருந்த போதும்இ அதில் அங்கம் வகிக்கும் பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஸ்குணவர்தன ஆகியோர் அதில் இருந்து இன்னும் விலகவில்லை.

இது தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கஇ வழிநடத்தல் குழுவில்இருந்து விலகுவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் நடைபெறவுள்ள யாப்பு வழிநடத்தல் கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும்இ தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகினாலும்இ தமது அணியின் சிலர் அதில் இணைந்திருந்துஇ போராட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மகிந்த அணி உறுப்பினர்களுடன்இ விஜேராம இல்லத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ அரசாங்கத்தில் இருந்து குழு ஒன்று தமது அணியுடன்இணையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரையில் 3 பேர் தம்முடன் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர்.

எனினும் 17 அல்லது அதனைவிட அதிகமானவர்கள் தம்துடன் இணையக்கூடும் என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

Leave a comment