இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது – பிரதமர்

2100 0

ஜி.எஸ்.பி வரிச் சலுகையுடன் இலங்கை சர்வதேச சந்தைக்கான புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பாக கொழும்பு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தித்துறைக்கு கிடைத்துள்ள சலுகைகளை ஏனைய துறைகளுக்கும் அறிமுகம் செய்வதும் அவசியமாகும்.

இதன் மூலம் நாட்டின் கைத்தொழிலை மேம்படுத்த முடியும்.

இதற்காக கண்டியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை முதலாவது கைத்தொழில் வலயம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment