ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவது குறித்து ஆலோசனை

812 0
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அங்கம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் ஹட்டன் எபோட்ஸிலி ஆனைத் தோட்டத்தில் 20 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்  இதனை குறிப்பிட்டார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து மலையகத் தமிழ் சமூகத்துக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றன.
அதே போல் தொழிற்சங்க கட்டமைப்பில் வெவ்வேறாக செயற்படுகின்ற நாம் எதிர்காலத்தில் ஒரே தொழிற்சங்கமாக செயற்படுவதற்கு ஆலோசித்து வருகின்றோம்.
இதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
இதனிடையே, இந்த வருடத்துக்குள் மூவாயிரம் பேருக்கு காணி உறுதி பத்திரங்களை வழங்கவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Leave a comment