கண்ணிவெடி அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதியில் கண்ணிவெடிகள் மீள பரிசோதிக்குமாறு மக்கள் கோரிக்கை

366 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் சுனாமி நினைவாலயத்துக்கு முன்பாக  தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்த்தாங்கி அமைப்பதற்காக துப்பரவு செய்யப்பட்ட காணியில் நிலக்கண்ணிவெடிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகள் அடங்கிய பகுதி ஏற்க்கனவே கண்ணிவெடியகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கண்ணிவெடியகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும் குறித்தபகுதியில் இன்று குறித்த கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டநிலையில் இதற்கு முன்னர் வெடிபொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

எனவே  குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளை  மீண்டும் கண்ணிவெடியகற்றும் செயற்ப்பாட்டுக்கு உட்ப்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர். குறித்தபகுதியில் மக்கள் நடமாடித்திரிந்தும் தெய்வாதினமாக இதுவரை எந்த விபரீதமும் இடம்பெறவில்லை இருப்பினும் தற்ச்சமயம் மக்கள் அச்சமடைந்துள்ளதோடு குறித்த பகுதியை மீண்டும் கண்ணிவெடியகற்றும் செயற்ப்பாட்டிற்கு உட்ப்படுத்தி கண்ணிவெடிகளற்ற பிரதேசம் என்பதனை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரியுள்ளனர்.

Leave a comment