இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

310 0

கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவின் விசாரணைமன்று அடிப்படையிலான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.

சாட்சிப் பதிவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் நடைபெறும்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான இந்த விசாரணைமன்றில், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் நாள் சாட்சியப் பதிவுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

அதன்போது, முன்னாள் யாழ். தலைமை பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய, சாட்சியம் அளித்தார்.

இதன்போது, யாழ் தலைமை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உதவி ஆய்வாளர் ஸ்ரீகஜன், சுவிஸ் குமார் என்பவரை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக அழைத்து வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டிற்காகவே சுவிஸ் குமார் அழைத்து வரப்பட்டதாக அவர் நேற்றைய தினம் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மூன்றாம் நாள் சாட்சியப் பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இன்றையதினம் வழக்குடன் தொடர்புடைய மிக முக்கியமான சாட்சிய பதிவு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment