முத்துராஜவல பகுதியில் குப்பை கொட்டத் விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

428 0

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவல வனப் பகுதியில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு வந்தது.

முத்துராஜவல பகுதியைச் சேர்ந்த 35 பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனுவின் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்றோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment