ஐ.சி.சியின் புதிய தரப்பட்டுத்தல் வெளியீடு – ஹேரத் முன்னேற்றம்

337 0

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச்சுத் தரப்படுத்தலில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சிம்பாப்வே ஆணியுடனான டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு 11 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்த நிலையில்இ இந்த முன்னேற்றத்தை அவர் கண்டுள்ளார்.

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முதலாம் இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார்.

அதேநேரம் துடுப்பாட்ட தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் ஸ்டிவ் சுமித் முதலாம் இடத்தில் உள்ளார்.

ஜோய் ரூட் மற்றும் கேன் வில்லியம்ஸ் ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.

அதேநேரம் டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் முதல் 18 இடங்களுள் இலங்கை அணியைச் சேர்ந்த யாரும் இல்லை.

19ஆம் இடத்தில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் உள்ளார்.

Leave a comment