இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – உலக சுகாதார ஸ்தாபனம்

261 0

டெங்கு நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு பயண அறிவுறுத்தல் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்க எந்த பரிந்துரையும் முன்வைக்கப்படவில்லை என்றுஇ உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்;த வருடத்தின் ஏழு மாதக் காலப்பகுதியில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ 215 பேர் டெங்கினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான டெங்கு தாக்கத்துடன் ஒப்பிடும் போதுஇ இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு இலங்கையில் அதிகம் நிலவுகிறது.

குறிப்பாக 43 சதவீதமான டெங்கு பாதிப்பு மேல் மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள இலங்கையின் சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ முறையற்ற விதத்தில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் பொருட்டுஇ பொது இடங்களில் சீ.சீ.டி.வி பொறுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு பொருத்தப்படவுள்ள சீ.சீ.டி.வி கமராக்களை கைப்பேசிகளின் ஊடாக அவதானிக்கும் வசதி அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment