படுகொலைசெய்யப்பட்ட மாணவியான வித்யா மற்றும் அவரின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தகத்துக்குரியவர்களின் மரபணு அறிக்கை உள்ளிட்ட மேலும் மூன்று சான்றுப்பொருட்கள் விசாரணை மன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்றில் இரண்டாம்கட்ட சாட்சிப் பதிவகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

