இலங்கைக்கு 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

228 0

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடனானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் கீழ் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

நிதி தட்டுப்பாட்டை குறைத்தல், அந்நியச் செலாவணி கையிருப்பை மீளக் கட்டியெழுப்பல், பொருளாதார உறுப்பாட்டை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக எளிய நியாயமான வரி முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக இந்த கடன் தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி அந்தக் கடனுதவியின் இரண்டாம் கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவினால் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடனுதவியை வழங்க தீர்மானித்ததன் பின்னர் கருத்துரைத்த சர்வதேச நாணய நிதியத்தின் பதில் தலைவர் மிட்சுஹிரோ புருசாவா, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிதியின் கீழான இலங்கையின் வேலைத்திட்டங்கள் சந்தோஷப்படும் வகையில் அமைந்திருப்பதாக கூறினார்.

புதிய உள்நாட்டு வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்தல், அரச நிதி ஒருங்கிணைப்பு, வரி முறையை திறமையாக மற்றும் நியாயமாக அறவிடுதல் போன்றன சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றுள்ளன.

Leave a comment