நெவிலின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமல்ல!

313 0

நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கையில், அரசாங்கத்திற்கு முக்கியமானது, நெவில் பெர்ணான்டோவின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். ஒவ்வொருவரதும் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் புறந்தள்ளி, டெங்கு, குப்பை, வாழ்க்கைச் சுமை போன்ற மக்களின் தேசியப் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்துமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், வைத்திய பீட மாணவர்கள், அவர்களது பெற்றோர், சயிட்டம் எதிர்ப்பாளர்கள் என, எவரும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை, அரசுடமையாக்குமாறு கூறவில்லை. சயிட்டம் நிறுவனத்தையே அரசாங்கம் பொறுப்பேற்குமாறு கூறினர்.

சயிட்டம் மற்றும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை ஆகிய இரண்டும் ஒன்றல்ல வேறுவேறு. நெவில் பெர்ணான்டோ என்பது தனியார் வைத்தியசாலை, சயிட்டம் என்பது சட்டவிரோத வைத்திய பீடம். நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வராததால், அதன் உரிமையாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

நோயாளர்கள் இல்லாமையால் ஒருபுறம் வைத்தியசாலையை நடத்த வறுமானம் போதாது, மறுபுறம் சயிட்டம் வைத்திய பீடத்தை நடத்த முடியாது, இதுபோன்று நெவில் பெர்ணான்டோ எதிர்நோக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதே, அந்த வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம், என்றார்.

Leave a comment