மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவர்

2035 23

அம்பாறை , திருக்கோவில் , தம்புலுவில் பிரதேசத்தில் தனது மனைவியை தேங்காயால் தாக்கி கொலை செய்த கணவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியதில் நேற்று இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

38 வயதுடைய யோக சுந்தரி என்ற பெண்ணொருவரே இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் அம்பாறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , திருக்கோவில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment