தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதம்

410 0
தொடரூந்து வீதிகள் மற்றும் தொடரூந்து நிலையங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு தொடர்பில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டன.
பிரதான தொடரூந்து நிலையங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தெமட்டகொடை தொடரூந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Leave a comment