முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

463 0

சைட்டம் நிறுவனத்துக்கு எதிராக தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முழுமையாக கைவிடவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இதுவரை வழங்கியுள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் கால்லகே குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தாம் நிதானமாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதமரும் சுகாதார அமைச்சரும் சாதகமான ஒரு தீர்மானத்தை முன்வைத்திருந்தனர்.

Leave a comment