சிறிலங்கா ஒத்துழைக்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை

685 0

சிறிலங்காவில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு  குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் நாள் சிறிலங்காவுக்கு வந்திருந்தார்.

இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன் போதே இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐ.நாவின் தலையீடுகள் குறித்து விஜேதாச ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, ஐ.நாவுடன் ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பேன் என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், விஜேதாச ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.

அதற்கு விஜேதாச ராஜபக்ச, ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக பதிலளித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நா நியாயமற்றமுறையில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் செயற்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் எமர்சன் ஐ.நாவுக்கு அறிக்கையிட்டுள்ளார்.

நீதியமைச்சில் நடந்த இந்த வாக்குவாதங்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரும், உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a comment