பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றியுடன் நிறைவடைய வேண்டும் – காலோ பொன்சேகா

5357 19

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் பொது நோக்கிற்கான போராட்டம் வெற்றியுடன் நிறைவடைய வேண்டும் என இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாணவர்களை சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோது காலோ பொன்சேகா இதனை தெரிவித்தார்.

சுயநலத்தால் ஆளப்படுகின்ற உலகில் பொநல நோக்குடன் இலங்கையின் இலவச கல்வியை பாதுகாக்க மாணவர்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

அந்த மாணவர்களின் தூய்மையான பொதுநோக்கு சிந்தனை வெற்றிபெற தாம் பிரார்த்திப்பதாகவும் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Leave a comment