இம்ரான் கானின் சொத்துக்களை பரிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

4253 18

வன்முறைகளை தூண்டிய குற்றத்திற்காக பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரான இம்ரான் கானின் சொத்துக்களை பரிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ்செரீப் பதவி விலக வலியுறுத்தி கடந்த 2014ஆம் ஆண்டு இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சியும், மத போதகரான தஹிருல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெக்ரீக் கட்சியும் போராட்டம் நடத்தின.

பல நாட்களாக தொடர்ந்து நடந்த போராட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் தாக்கப்பட்டமை, ஊடகங்கள் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வன்முறை சம்பவங்களை தூண்டியதாக அந்த 2 கட்சிகள் மீது இஸ்லாமாபாத் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இம்ரான்கான் மற்றும் இ காத்ரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது.

அவர்கள் இருவரும் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், இம்ரான்கான் மற்றும் காத்ரியின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment