வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று இன்று 130வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக வீதியோரத்தில் கூட்டாரம் அமைத்து ஆரம்பித்த போராட்டம் இன்று இன்று 130வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை பங்குனி மாதம் முதல் முன்னெடுத்துள்ளனர்
இந்நிலையில் வீதியோரமே வாழ்வாகிப்போன எமக்கு தீர்வு வழங்குவது யார் எனவும் தீர்வு கிடைக்காது போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்