புதிய அரசியல் யாப்புக்கு எதிராக பௌத்த பீடங்கள் முன்வைக்கும் கருத்துக்கு எதிராக தமிழ் முஸ்லிம் மக்கள்
ஒன்றுபட வேண்டும் என தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தாவூரை சேர்ந்த மூத்த ஊடகவியளாளர் ஏ.எல்.எம்.சலிம் வாழ்நாள் ஊடகவியளாளராக வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மூத்த ஊடகவியளாளர் ஏ.எல்.எம்.சலிம் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பாலம் இருப்பவர்
எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

