உயிலங்குளம் கிராமத்தில் 230 மீற்றர் கொங்கிரற் வீதி அமைக்கும் பணி ஆரம்பம்

233 0

ரூபா 5 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட உள்ள துணுக்காய்  பிரதேசசெயலகத்துக்குட்பட்ட உயிலங்குளம் என்னும் கிராமத்தில் 230 மீற்றர்  கொங்கிரீற்வீதியின் ஆரம்ப பணி 10.07.2017 ம் திகதி மாலை 5.00 மணியளவில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி  வர்த்தகவாணிப வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை  பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு இந்த வீதி புனரமைப்பு  ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வுக்குவடக்கு மாகாண சபையின் மீன்பிடி போக்குவரத்து  கிராமிய அபிவிருத்தி  வர்த்தக வாணிப  வீதி அபிவிருத்தி அமைச்சர் கௌரவபா.டெனீஸ்வரன் அவர்களும் வடமாகாண சபை  பிரதி அவைத்தலைவர்வ.கமலேஸ்வரன் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்  உறுப்பினர்கள் மக்கள் எனபலரும் கலந்துகொண்டார்கள்.

Leave a comment