முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சாரதியாக கடமையாற்றிய கப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 3 கோடி ரூபாய் தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சந்தேகநபர்கள் சார்பாக பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், மேலதிக நீதவான் சாணிமா விஜேபண்டார பிணை வழங்க மறுப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

