அவுஸ்ரேலிய யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

213 0

அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 118 மீற்றர் நீளத்தையும் 14.8 மீற்றர் அகலத்தையும் கொண்ட இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உள்ளிட்ட 190 பேர் பணியாற்றுகின்றனர்.

கடற்படை சம்பிருதாயங்களுக்கமைவாக இந்த கப்பல் வரவேற்கப்பட்ட அதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் 4 நாட்கள் தங்கியிருக்கும் இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்துள்ள நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்த்தக்கது

Leave a comment