தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டுப்பாட்டு கட்டணங்கள்

228 0

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

குருதி பரிசோதனைக்கு 250 ரூபாவும், டெங்கு தொற்று நோய்த் தாக்கம் நேர்மறையா அல்லது எதிர்மறையா என பரிசோதிப்பதற்கு 1000 ரூபாய் அறவிடப்பட வேண்டும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கட்டண கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment