புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள்: காவல், தீயணைப்பு துறைக்கு 54 புதிய அறிவிப்புகள்

3270 0

காவல், தீயணைப்பு துறைக்கு புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ரூ.3.71 கோடியில் சைபர் அரங்கம், பதக்கம் பெறுபவருக்கு பரிசு தொகை உயர்வு உள்ளிட்ட 54 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

சட்டசபையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

1. கோயம்புத்தூர் மாவட்டம், தடாகத்தில் புதிய காவல் நிலையம் 2.64 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

2. சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் காவல் நிலையம் மற்றும் கருமந்துரை காவல் வட்டங்கள், 7.8 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

3. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் காவல் நிலையத்தை ஊரகம் மற்றும் நகரம் என இரண்டாகப் பிரித்து ஆத்தூர் நகர காவல் நிலையம், 2.57 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

4. கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டையில் புதிய காவல் நிலையம் 1.52 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

5. சேலம் மாநகரம், கருப்பூரில் புதிய காவல் நிலையம் 1.52 கோடிரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

6. நாமக்கல் மாவட்டம், வெப்படையில் புதிய காவல் நிலையம் 1.52 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

7. தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள கோபிநத்தத்தில் புதிய காவல் நிலையம் 2.64 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

8. தமிழ்நாடு காவல் துறையினருக்காக சைபர் அரங்கம் ஒன்று 3.71 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

9. சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைத் தண்டிக்க மின் ரசீது முறை, 6.42 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும்.

10. வீரதீரச் செயலுக்காக, தமிழக முதல்வரின் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்படி 300 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக 9 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.

11. தமிழ்நாடு முதல்- அமைச்சரின் காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கு, மாதாந்திர பதக்கப்படி 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். இதற்காக 54 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.

12. காவல்துறையினரின் மெச்சத்தக்க பணிக்காக வழங்கப்படும் முதல்- அமைச்சரின் வெகு மதியுடன் கூடிய ரொக்கத் தொகையை காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், சார்பு ஆய்வாளர் முதல் காவல் ஆய்வாளர் வரை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதற்காக 9 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.

13. தொழில்நுட்ப மற்றும் சிறப்புச் சேவையில் சிறந்து விளங்கியோருக்கான, முதல்- அமைச்சரின் வெகுமதியுடன் கூடிய ரொக்கத் தொகையை இனம் 1-ல் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாயாகவும், இனம் 2-ல் உள்ளவர்களுக்கு 3,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் மற்றும் இனம்3-ல் உள்ளவர்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். இதற்காக 1.2 இலட்சம் ரூபாய் செலவிடப்படும்.

14. சென்னை பெருநகர காவல் துறைக்குட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில், தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடி, 8 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

15. சென்னை பெருநகரம், ஐஸ்அவுஸிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், ஜெ-2 கானாத்தூர் காவல் நிலையம், டி9 பட்டாபிராம் காவல் நிலையம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணகிரி நகர காவல் நிலையம், ஓசூர் காவல் நிலையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள பன்முக காவல் நிலையம், சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி போக்குவரத்து காவல் நிலையம், துறையூர் போக்கு வரத்து காவல் நிலையம், கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய 11 காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் 11.37 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

16. வேலூர் மாவட்டம் அரக்கோணம் மற்றும் வாணியம்பாடியிலும், சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் ஆத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவிலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியிலும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஊரகத்திலும் ஆக 7 காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்களுக்கும் மற்றும் இருப்பிடங்களுக்கும் 4.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

17. 9.28 கோடி ரூபாய் செலவில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 7-வது அணியில் தங்கும் காவல் ஆளினர்களுக்கு இரண்டு படைக் குடியிருப்புகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் சோதனைச் சாவடியும் கட்டப்படும்.

18. விழுப்புரம், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள க்யூ-பிரிவுகளுக்கும் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கும், அலுவலகக்கட்டிடங்கள், 7.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

19. கலவரத்தின்போது, காவல் ஆளூநர்களின் பாதுகாப்பிற்காக பாலிகார் பனேட் லத்திகள், பாலிகார்பனேட் தடுப்புக் கருவிகள், பைபர் தலைக்கவசம் மற்றும் உடற் பாதுகாப்பு கவசம் போன்ற 10,000 பாதுகாப்புச் சாதனங்கள், 5 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

20. 100 காவல் நிலையங்களில் கண்காணிப்பிற்காக, இணைய வசதியுடன் கூடிய உட்சுற்று கண்காணிப்பு தொலைக்காட்சி சாதனங்கள், 2.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

 

21. போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக, 2 மீட்பு வேன்கள், 54.40 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

22. சிறைக் கைதிகள் வழிக்காவல் பணிக்காக, மூன்று வேன்கள், 39 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

23. காவல்துறையினருக்காக மூடிய வகை லாரிகள் நான்கு, 52 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

24. பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் வசதிக்காக ஏழு நடமாடும் கழிவறை ஊர்திகள், 86.45 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

25. அதி முக்கிய நபர்கள் பாதுகாப்புக்காக, சேலம் மாவட்டத்திற்கென 22 வாகனங்கள், 2.74 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

26. கையடக்க ஜாமர் சாதனம் ஒன்று, 50 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

27. நேரியல் அல்லாத சந்தி கண்டுபிடிக்கும் கருவி இரண்டு, 17 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

28. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இரண்டு, 35 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

29. பைபர் ஆப்டிக் கண்காணிப்பு சாதனம் ஒன்று, 25 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

30. கடித வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் ஆறு, 1.20 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

31. மெட்டாலிக் புரோடர் கருவிகள் பத்து, 24 ஆயிரம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

32. அதிரடிப் படை வீரர்களுக்கென குண்டு துளைக்காத 360 கோண வடிவிலான 2 பொதியுறைகள், 19 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

33. வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் சாதனங்களைப் பழுதுபார்த்து சரி செய்வதற்கான உபகரண தொகுப்பு இரண்டு, 26 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

34. நடமாடும் மோர்ச்சாஸ் கருவிகள் மூன்று, 18.60 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

35. திருச்சி மாவட்டத்தில், எண்ம முறையிலான தகவல் தொடர்பு முறை, 11.60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

36. புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ம முறையிலான தகவல் தொடர்பு முறை, 10.80 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

37. திருநெல்வேலி மாநகரில் எண்ம முறையிலான தொலைத்தகவல் தொடர்பு முறை, 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

38. கடலோர காவல்படை காவலர்களுக்கு, 66 உயிர்க் காப்பு மேலட்டைகள், 9.90 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

39. ஏழகு தொலைத் தொடர்பு கருவியில் ஏற்படும் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய, 24 இலட்சம் ரூபாய் செலவில் உபகரணம் வாங்கப்படும்.

40. மரபணு ஆய்வு சாதனம் மற்றும் மரபணு சோதனை தட்டச்சு பயன் பாட்டிற்கு, 3,500எக்செல் ஜெனட்டிக் ஆய்வு சாதனம்24 கேப்பிலரி மற்றும் அதன் உபகரணங்கள், 1.20 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

41. பெட்ரோலியப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கான கருவி ஒன்று, 50 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

42. ஆர்கானிக் கெமிக்கல்களை ஆய்வு செய்வதற்கு உபகரணங்களுடன் கூடிய ஏ.டி.ஆர்.யுவிவி.ஐ.எஸ். ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் சாதனம் ஒன்று, 25 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

43. உட்சுற்று தொலைக் காட்சி சாதனங்களை ஆய்வு செய்வதற்கும் மற்றும் எண்ம சாட்சியங்களை வெளிக் கொண்டு வரவும், உயர் ரக எண்ம பரிசோதனைக்கான தரவு மீட்பு வன்பொருளுடன் கூடிய 8.0 பதிப்பு கொண்ட மென்பொருள் ஒன்று, 25 இலட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

44. சேலம் மாவட்டத்தில் இயங்கிவரும் தடய அறிவியல் ஆய்வகத்தினை பிரித்து கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் தனியாக ஒரு புதிய வட்டார தடய அறிவியல் ஆய்வகம் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு 1.59 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

45. சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தில் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தடய அறிவியல் ஆய்வகம் 3.68 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் படும்.

46. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களுக்கு, அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் எதிர்பாரா பெருந் தீக்காயங்கள் மற்றும் கொடுங்காயங்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை மேற்கொள்ள அதற்கான செலவினத்தை ஈடுசெய்யும் வகையில் தனியாக “எதிர்பாரா மருத்துவ நல நிதி” ஒன்றை உருவாக்கி, அந்த மருத்துவ நல நிதிக்கு ஆண்டு தோறும் 50 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

47. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சவால் நிறைந்த தீ விபத்து, இயற்கை இடர்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத இடர்படி தீயணைப்பாளர் முதல் உதவி மாவட்ட அலுவலர் வரையிலான பணியாளர்களுக்கு 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாகவும்; மாவட்ட அலுவலர்களுக்கு 450 ரூபாயிலிருந்து 900 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

48. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் 99 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

49. சேலம் மாவட்டம் சூரமங்கலம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் திருவாடனை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகிய இடங்களில் ஐந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு 5 கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்படும்.

50. தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் வான்நோக்கி உயரும் 104 மீட்டர் நீளம் கொண்ட ஏணி ஊர்தியினை நிறுத்துவதற்கான கட்டடம் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

51. சென்னை அசோக்நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு மாவட்ட அலுவலகம், உதவி மாவட்ட அலுவலர் அறை, நிலைய அலுவலர் அறை மற்றும் தீயணைப்போர் தங்கும் அறைகள் கொண்ட புதிய கட்டடம் 4 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

52. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நிலையங்களின் அருகிலேயே 85 குடியிருப்புகள். தென்சென்னை மாவட்டம்- சைதாப்பேட்டை, ஈரோடு மாவட்டம்-ஈரோடு, நீலகிரி மாவட்டம்-கூடலூர், திருப்பூர் மாவட்டம்-வெள்ளக்கோயில், திருச்சி மாவட்டம்- மணப்பாறை ஆகிய ஐந்து இடங்களில் 15 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

53. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம், மற்றும் திருவாரூர் மாவட்டம் பேரளம் ஆகிய 6 இடங்களில், 6 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் ஓர் ஊர்தி யுடன் கூடிய புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் அமைக்கப் படும்.

54. திருவாரூர் மாவட்டத் தில், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் வலங்கைமான் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டடமும் பணியாளர்களுக்குக் குடியிருப்புகளும் கட்டப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a comment