
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை மீள பெற போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வருட காலம் அவர்கள் அங்கு தங்கியிருந்து, தீவிரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.
உலக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினர் அல்கைதா தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் மிகத் திறமையாக செயல்பட்டனர்.
தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டியது மிக அவசியமாகவுள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, உலகின் எந்த ஒரு பகுதியிலும் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல், தம்மை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

