அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

442 0

ஹம்பாந்தொடை நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உந்துருளியில் பயணித்தள்ள இருவரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்த நபர் ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காராப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment