நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு

599 0

நலத்திட்ட நிதிகளை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில்   காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கு வரவேண்டிய நிதியினை பேரிணையம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றுதிரண்டு மாபெரும் காலவரையறையற்ற தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 07.30 மணி தொடக்கம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள  கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 இது குறித்து கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவிக்கையில்
வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தில் உள்ள எமது சங்க நிதிகளை மீள வழங்குமாறும்ரூபவ் பேரிணையத்தில் இருந்து கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தை விலக்கிவிடுமாறும் கோரி கடந்த 10.08.2016 ஆம் திகதி பொதுச்சபையின் விசேட கூட்டத்தின் 04 ஆம் இலக்க தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 19.08.2016 ஆம் திகதி அன்று கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் வடமாகாண பேரிணையம் ஆகியவற்றுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 01.09.2016  ,13.09.2016 மற்றும் 21.09.2016 ஆம் திகதிய கடிதங்கள் மூலம் நினைவூட்டப்பட்டது.

கடந்த ஒரு வருடமாக எந்தவிதமான பதில்களையும் வழங்காத நிலையில் தற்போது  05.07.2017 ஆம் திகதிக்கு முன்னர்   தீர்வு வழங்கப்படாதுவிடில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதைத்
தொடர்ந்து  வடமாகாண பேரிணையத்தினால் 30.06.2017 ஆம் திகதி இடப்பட்டு  அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் குறித்த பிரச்சினை தொடர்பாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரே தீர்வுகாண வேண்டும் என்றும் அவரிடம் இந்தப் பிரச்சினையை பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் 03.07.2017 ஆம் திகதிய உதவி கூட்டுறவு ஆணையாளரினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில்   சங்கத்தின் பிரச்சினை
தொடர்பாக வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையம் தமக்கு எதனையும் தெரியப்படுத்தவில்லை என்றும் பேரிணையத்தில் இருந்து சங்கம் தாமாக விலகுவதாக இருந்தால் பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைவாக 90 நாட்களின் பின்னர் விலகலாம்
என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 அவ்வாறு எனின் தற்போது தெரிந்த இந்தச் சட்டம் ஏன் கடந்த ஒரு வருடமாக தெரியவில்லை என்கின்ற சந்தேகம் எம்மிடம் எழுகிறது.
அதுமட்டுமல்ல 04.07.2017 ஆம் திகதியிடப்பட்டு வடமாகாண கூட்டுறவு ஆணையாளரினால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூட்டுறவு சட்டங்களுக்கு அமைவாக பேரிணையத்தில் இருந்து ஒரு சங்கம் விலகுவதை அனுமதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே  கிளிநொச்சி மாவட்ட
கூட்டுறவு உதவி ஆணையாளர் விலகலாம் எனவும் வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் விலகமுடியாது எனவும் குழப்பமான கருத்துகளை கூறியுள்ளனர்.
எனவே  இவர்கள் மீது நம்பிக்கையில்லை என உணர்ந்த கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்கள்  எமது   நிதிகள் கிடைக்கும் வரை தொடர் காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்  என தெரிவிக்கின்றனர்

Leave a comment