ட்ரம்ப் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு

224 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கவுள்ளார்.

ஜீ20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இருவரும் ஜேர்மன் சென்றுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா, யுக்ரெயின் போன்ற விவகாரங்களால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்ற நிலையில், இதனை புதுப்பிக்க விரும்புதாக இரண்டுத் தலைவர்களும் கூறி இருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

அதேநேரம், கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய ஜனாதிபதியின் உதவியுடனேயே டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment