இலங்கையை ஆங்கிலயர்களே ஆட்சி செய்திருக்கலாம் – ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

12004 16

4s213சுதந்திரத்தை பெற்று கொள்வதற்காக ஒன்று சேர்ந்த நாடு கட்சி, இன, மத, பேதம் காரணமாக பிளவுப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கம்புறுபிட்டிய – அக்குருகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுவர்களாகவே இருக்கின்றனர்.

இன்று மக்கள் கூறுகின்றனர், இந்த நாடு ஆங்கிலயளர்களிடமே இருந்திருக்கலாம் என்கின்றனர்.

அவர்களிடம் இருந்திருத்தால் நாடு இரண்டு பட்டிருக்காது.

தற்போது, கட்சி, அரசியல், மதம், இனம் என்று வேறு பட்டிருக்கின்றனர்.

இன்று தொலைக்காட்சி பார்த்தால் புரியும்.

நாளொன்றுக்கு எந்தனை போராட்;டங்கள், எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.

இவற்றை பார்க்கும் போது நாட்டில் என்ன நடக்கின்றது என்ற குழப்பநிலை மக்களுக்குத் தோன்றும் என்றும் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment