அரசாங்கத்தை விமர்சித்தால் நானும் ஜோக்கர் ஆவேன்

218 0

உமா ஓய செயற்றிட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவதாக தகவல் தொழினுட்ப மற்றும் எண்மான உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பிரணான்டோ தெரிவித்துள்ளார். 

ஒரு சிலர் இந்த விடயத்தை அரசியலாக்கியுள்ளதன் காரணமாக பண்டாரவளை மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உமா செயற்றிட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்று சிரிகொத்த எதிர்கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது.

எவ்வாறாயினும், அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் ​போது தற்போதைய நிலையில் செயற்றிட்டத்தை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேபோன்று குறித்த செயற்றிட்டம் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட போது 4.1 கிலோமீற்றர் வரை பணி நிறைவடைந்திருந்தது. அது முழு செயற்றிட்டத்தின் 48 சதவீதம் என செயற்றிட்டத்தின் பணிப்பாளர், ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். இதன்காரணமாக இதன் பொறுப்பை எந்தவகையிலும் தற்போதைய அரசாங்கம் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

Leave a comment