ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி

264 0

இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.

இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றடைந்தார். 3 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனியின் ஹேம்பர்க் விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். மேலும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்திக்கிறார்.

இந்த பிரிக்ஸ் மற்றும் ஜி20 அமைப்புகளில் சீனாவும் உறுப்பு நாடாக இருப்பதால் இந்த மாநாட்டின் போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கிம் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடும் என தகவல் வெளியானது.

அதற்கிடையே அர்ஜென்டினா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, கொரியா, இங்கிலாந்து மற்றும் வியட்நாம் நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

சிக்கிம் எல்லையில் பதற்றம் நீடித்து வருகையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment