லொத்தர் சபை விவகாரம்: நீதிமன்றம் சென்றுள்ள பந்துல

248 0

அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில், பிரதிவாதிகளாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வௌிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மையில், இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபையை வௌிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வர ஜனாதிபதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் அவை நிதி அமைச்சின் கீழ் இருக்க வேண்டியவை என, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சபைகளும் நிறுவப்பட்டது பாராளுமன்றத்தின் விஷேட சட்டமூலத்தின் பிரகாரமே என தனது மனுவில் கூறியுள்ள பந்துல, அவை தொடர்ந்தும் நிதியமைச்சின் வசமே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment