சீனாவில் கடும் மழை – 56 பேர் பலி

235 0

சீனாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 56 பேர் பலியாகினர்.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 22 பேர் காணாமல் போயுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 37 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மீட்பு பணிகளுக்காக மூவாயிரம் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹூனான், சிச்சுவான், யுனான் உள்ளிட்ட பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment