பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்த விபத்து: பலி எண்ணிக்கை 206 ஆக உயர்வு

233 0

பாகிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பற்றி வெடித்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி சுமார் 25,000 லிட்டர் பெட்ரோல் கொண்ட டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியிலிருந்து சிந்தி சாலையில் ஓடிய பெட்ரோலை பிடிக்க சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் சூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததில், பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100 க்கும் அதிகமானோர்
விபத்து நடைபெற்ற இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், லாகூர், முல்தான் மற்றும் பைசாலாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது, பலியானவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விபத்து தொடர்பாக உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 6 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Leave a comment