தேர்தல் திருத்தம் தவிர அரசியலமைப்பில் வேறு எந்தவொரு திருத்தமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்புக்கு பெளத்த பீடம் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றது என்று அஸ்கிரிய மகாநாயக பீடம்
தெரிவித்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகாநாயக்க தேரர் பீடமும் ஒன்றுகூடி போராடவேண்டிய நிலைமை வரும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க பீடம் குறிப்பிட்டுள்ளது.
புத்தசாசன அமைச்சின் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் இரவு அஸ்கிரிய மகாநாயக தேரர்களுடன்
சந்திப்பொன்றை மேற்கொண்டு புதிய அரசியல் அமைப்பில் பெளத்த மத பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பிலேயே ஆனமடுவே தம்மதாச அனுநாயக தேரர் இதனை
வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் ஒற்றையாட்சித் தன்மையும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி முறைமை அவசியம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் இருக்க வேண்டும். மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அது தேர்தல் திருத்தங்களில் மாத்திரம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

